Sunday, January 1, 2012

வாசமற்ற வாழ்வு

அதுகளின் மொழி
எனக்கெப்படித் தெரியுமெனும்
வியாக்கியானங்களை விலக்கிவையுங்கள்
அன்பின் வயப்பட பரிச்சயமாகும்
அடர்ந்து கிடந்த அந்திமந்தாரையில்
அமர்ந்திருந்த தட்டான்களின்
உரையாடலின் கவலைப்பாடிது
துரத்த துரத்த போக்குக்காட்டி
களைப்புறும் கணம் கையுள் சிக்க
சிறு சிறு கல் தூக்கச் செய்யும்
தண்டனையிட்டு மகிழ்ந்திட்ட
மழலைகளின்
வாசனையற்றுப் போனதே
நம் வாழ்வு...

2 comments:

சசிகலா said...

அருமை

rvelkannan said...

இந்த உலக மொழி(அன்பு)
பொது மொழியானால் நல்லாத்தான் இருக்கும்

Post a Comment