Friday, June 15, 2012

நினைவின் புழுதி

நிறைந்த கிணற்றிற்கு
ஒற்றை பூச்சூடி
அழகு ததும்பச் செய்து
துளித்தேன் நா பரிமாறி
உடல் தித்தித்து
மனம்படிந்த புழுதியோடு
இணைந்தலைந்த பொழுதுகளை
நினைவுள் பூட்டி
தவித்தலைவாய்
வார்த்தை சாவிகளோடு அலைவுறும்
என்னைப்போலவே...
*

எறும்பு வீடு

கேட்டு சலித்தவள் அதிசயித்தாள்.
ஈ எறும்புகளை கொன்றொழித்திட
விஷம் வாங்கிய நாளின் அந்தியில்
வேடிக்கை பார்த்திருந்தோம் மழையை
பதட்டங்களை செவிகொள்ளாது
நனைந்து ஓடியவன்
திரும்பினான் கவலையோடு
மரத்தடியிருந்த எறும்பு வீட்டை
காணும்பாவென.
*

மயில்

காடலைந்து திரும்பியவன்
அழைத்து வந்தான்
கண்களின் பார்வைக்குத் தப்ப
புத்தகத்தினிடையே ஒளித்தான்
உறக்கம்கொள்கையில் பதுக்கினான்
தலையணையின் அடியில்
கானகத்தின் நினைவில் நடனமிட்டு
உறக்கமற்றிருந்த மயில்
பக்கங்களில் மிதந்த உயிரிகளை
தின்று முடித்தது.

நன்றி: குறி

2 comments:

செய்தாலி said...

மூன்றும் முத்துக்கள் சார்
என்ன அழகான கவிதைகள் சார்

கருத்து இடும் பகுதியில்
Show word verification yesஆக மாற்றினால்
கவிதை வாசிக்கும் ரசிகர்களுக்கு பின்னூட்டம் இட மிக எளிதாக இருக்கும் சார்

செய்தாலி said...

sorry

Show word verification Noஆக மாற்றினால்
கவிதை வாசிக்கும் ரசிகர்களுக்கு பின்னூட்டம் இட மிக எளிதாக இருக்கும் சார்

Post a Comment