Wednesday, July 26, 2017

Vasu Devan

ந. பெரியசாமியின் ”குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம்” என்ற தொகுப்பு குழந்தைகளின் உலகம். கருவறை முதல் யோனி வாயிலில் ஜனிக்கும் குழந்தைகள் பெரியசாமியின் கவிதைகளில் தஞ்சமடைய குதூகூலத்துடன் குதிக்கிறது..மழலைகளின் ஒவ்வொரு அங்க அசைவையும் துல்லியமாக கவனித்து கவிதைகளை குழந்தைகள் பார்வையில் எழுதியுள்ளியுள்ளார். இந்தக் கவிதைகள் வாசித்து உள்வாங்குபவர்கள் குழந்தைகளே ஆசான்கள் என்பதை உணர்வார்கள்…அன்பையும், எல்லையில்லா கருணையையும் குழந்தைகள் மேல் பொழிந்து முத்தமிடுகிறார்…
இரண்டு கவிதைகள்.
(1) இறுக மூடினான்
முன்பின் கதவுகளை.
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை.
துவட்டிக் கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்.
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்.
சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை.
(2) குளக்கரையின் நிழலை
நீர்
தளும்பி விளையாட
சிறு புழுக்களைச் செருகி
மீன்களைக் குவித்தவன்
வயிற்றைக் கிழித்து
தேடத் தொடங்கினான்
பாட்டியின் கதை மோதிரத்தை.

No comments:

Post a Comment