Wednesday, July 26, 2017

‎Meenaa Sundhar

Meenaa Sundhar பெறுநர் Periyasamy Periyasamynatarajan
25 மே


#கவனிக்கப்பட வேண்டிய கவிதைத் தொகுப்பு-(6)
#குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம்
#.பெரியசாமி.
தக்கை வெளியீடாக தோழர் ஆதவன்தீட்சண்யாவின்அழகிய அட்டைப்பட வடிவமைப்பில்,ஓவியர் கார்த்தியின் விரல் நளினத்தில் மிளிர்கிறது "குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீலவானம் "
இனிய நண்பர்,கவிஞர் ந.பெரியசாமி பழகுதற்கினியர்.குழந்தைகள் மீது பெருநேசம் கொண்ட அவரே ஒரு வளர்ந்த குழந்தை.பழகும்போது அத்தனை இயல்பும்,எளிமையும் கொண்டவர்.இலக்கியம்வழி பலகாலமாக அறிமுகமாயிருப்பினும் நேரில் பார்க்கையில் அன்பால் நெகிழ்த்தியவர்.ஓசூரில் வசிக்கும் அவரின் பூர்வீகம் கடலூர்.
குழந்தைப்பாடல்களால் மனங்கவர்ந்த கவிஞர்களுள் இவர் குழந்தைகள் பற்றிய அனுபவங்களை இன்றைய மொழிநடையில் மனம் அள்ளிப் போகிறார்.ஓர் உளவியலாளரைப் போலக் குழந்தைகளை மிகக்கூர்மையாகக் கவனித்து அவர்களின் பூடகமில்லா வாழ்வை கவிப்படைப்பாக்கியிருக்கிறார்.
சித்திரம் வரையும் சிறுவனை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்.
#இறுக மூடினான்/முன்பின் கதவுகளை
திரைச்சீலைகளால் மறைத்தான்/ஜன்னல்களை/துவட்டிக் கொள்வதென துண்டுகளைக் கொடுத்தான்/அவனது அடுத்த கோமாளித்தனமென/பரிகசித்துக் கொண்டிருக்கையில்/சாரலில் நனையத் துவங்கினோம்/சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்/அருவியை.
ந.பெ.வின் மொழிநடை சிக்கலில்லாதது.யாவரும் படித்த நிலையில் உள்வாங்கிக் கொள்ளத்தக்கது.குளத்தைத் தூர்த்து கட்டிய வீட்டில் வசிக்கும் சிறுவன் வீட்டின் தரைக்குக் கீழே வாத்து.கொக்கு.பாம்பு,மீன்,உள்ளிட்டவைகளின் சத்தம் கேட்கிறது என்பது இயற்கையை அழித்த குற்றத்தின் அச்சம் நம்மைக் கவ்வும் புதிய கட்டுமானம்.அந்தக் கவிதை இப்படி முடிகீறது.
#மதிய பொழுதொன்றின்
வெய்யிலுக்காக வீட்டின் முன் ஒதுங்கியவர்/அப்பொழுதெல்லாம் அடர்ந்த மரங்கள் சூழ/பெரும்குளம் இருந்தது இங்கேயென்றார்.
நதிச்சிறை,மதுவாகினி,தோட்டாக்கள் பாயும் வெளி தொகுப்புகளைத் தொடர்ந்து வெளிவந்திருக்கும் இத்தொகுப்பு வாசிப்பில் புதிய அனுபவம் தரக்கூடியது.
வாழ்த்துகள் ந.பெரியசாமி.

No comments:

Post a Comment