பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. அருகில் அண்டியது பூனை. நீவிடத்
துவங்கினேன். என் உடலின் வெப்பம் கைகளில் இறங்கியபடி இருக்க, சுகமாக
அணைந்துகொண்டிருந்த பூனை விருட்டென ஓடத் துவங்கியது. சூழல் சலனத்தால்
நினைவுகொள்ள மீண்டும் வாசித்தேன் 'குருதட்சணை' கவிதையை. குருவாகிறார்
ஏகலைவன். சன்னமாக பேசத் துவங்கிய மொழி பெரும் கதகதப்பை ஏற்படுத்தியபடி
இருக்கிறது.
பட்டாம்பூச்சிக்களுக்கு மலரை கொடுத்து, அலையடிக்கும் கடல் ரசித்து, நிழலோடு யுத்தம் செய்து, ஆழிலையின் பழுப்பு நிறத்திற்காக வருந்தி, பிரியத்தின் குருதியை கசிவித்து, நீரோவிற்கு நன்றியை தெரிவிக்கச் சொல்லி, கோப்பைகளில் வழியும் இரவொன்றில் உயிர்த்தெழும் புத்தனுக்காக காத்திருந்து, பூத்தலின் ரகசியம் பேசி சிவனாக மாறுபவனின் அசலான வாழ்வை பேசுகின்றன...

யாழியின்
மகா சிவராத்திரியும்
சில
தேநீர் கோப்பைகளும்...
மகா சிவராத்திரியும்
சில
தேநீர் கோப்பைகளும்...
No comments:
Post a Comment