Sunday, June 10, 2012


சுமைதாங்கி கற்களல்ல...


பொங்கும் கருணையை
கொப்புளங்களாக்கிக் கொள்ளுங்கள்
வசதியாக இருக்கும் சொரிந்துகொள்ள

வழியும் பவ்யங்களை
வழித்துக் குடித்துக்கொள்ளுங்கள்
உங்கள் எஜமானரிடம்
சிறந்த அடிமையென பெயரெடுக்க உதவும்

பாவப்பட வேண்டிய கட்டாயமெனில்
எங்களுக்கேதுமில்லை
உங்கள் இல்லத்தாளிடம் காட்டுங்கள்

நகைச்சுவை ஊறுகாயாக்கி
நக்கி நக்கி ருசித்ததுபோதும்
நாத்தம் மிகுமுன்
கழுவி கமுத்திடுங்கள்

புளித்த பாலின மொந்தையை
நீங்களே சுமந்து திரியுங்கள்
முதல் பாலின பெருமைக்காக
எங்கள் முதுகிலும்
தொங்கவிட துடிக்காதீர்கள்

இறக்கி வைத்தபடியே இருக்கவேண்டாம்
தன்னிரக்கங்களை
சுமைதாங்கி கற்களல்ல

கொழுத்துத் திரியும் உங்களின்
வக்கிர எலிகளை வலையவிடும்
பொந்துகளுமல்ல நாங்கள்

எங்களுக்கும் தெரியும்
மண்ணை மிதித்து
நடப்பது எப்படியென...
                      -லிவிங் ஸ்மைல் வித்யாவிற்கு

nantri:vallinam.com

4 comments:

நந்தினி மருதம் said...

உங்கள் கவிதைகளைப் படித்து வருகிறேன்
சொற்கள் மிக இயல்பாக வந்து விழுகின்றன
ஆனால் நெடுநாட்கள் மந்துக்குள் உறையும்படியாக

வாழ்த்தூக்கள் நணபரே

கவிதை நூல் வெளியிட்டிருக்கிறீர்களா ?
ஆம் எனில் எங்கே கிடைக்கும்

நந்தினி மருதம் said...

மன்னிக்கவும் கவிஞரே, என் முன்னைய குறிப்பில் சில எழுத்துப்பிழைகள் வந்து விட்டன
------------------------------------------

உங்கள் கவிதைகளைப் படித்து வருகிறேன்
சொற்கள் மிக இயல்பாக வந்து விழுகின்றன
ஆனால் நெடுநாட்கள் மனதுக்குள் உறையும்படியாக

வாழ்த்துக்கள் நணபரே

கவிதை நூல் வெளியிட்டிருக்கிறீர்களா ?
ஆம் எனில் எங்கே கிடைக்கும்

ந.பெரியசாமி said...

வணக்கம். நன்றி நந்தினி
2004ல் நானே நதிச்சிறை எனும் சிறிய தொகுப்பை வெளியிட்டுள்ளேன். ஏதுமில்லை.
அடுத்த தொகுப்பு வந்ததும் கட்டாயம் உங்களுக்கு தகவல் தருகிறேன்.

செய்தாலி said...

ம்ம்ம் அருமை சார்

Post a Comment