nantri: s.prabhakharan
ந.பெரியசாமியின் ' மதுவாகினி' கவிதைத் தொகுப்பினை
முன்வைத்து...
வாழ்வியங்குதலின் பொருட்டு இடம் பெயர்ந்த ஒரு கிராமிய மனிதனின்
அவலங்களையும்,ஆதங்கத்தையும்...
தீரவே தீராத காதலையும், முடிவுறா காமத்தையும்
முன் வைக்கிறாள்...மதுவாகினி....
மெய் வருத்தம்
வெப்பம் வேண்டித் தவிக்கும்
அதிகாலை மலரின் ஆவலில்
சுண்டக் காய்ச்சிய முத்தமிட்டு
வலிவடிய உரையாட நினைப்பதுண்டு....
என்ன செய்ய
கண்ணசந்து விடுகிறேன்
பக்.14
யாரோ யாருக்காகவோ எழுதியதென
கடந்து போகாது
சிறு சலனப்படின் போதுமெனக்கு.
பக்.37*
கிராமிய மணங்கமழும் நினைவுகளை கருப்பு சிலேட்டில்
குச்சியால் எழுதிப் பார்க்கும்
மனோபாவத்தில் கவிதை வரிகள் பதிகின்றன..
அரசியல்.. சமூக அநீதிக்கு எதிராக... எதிராக...
[இசை யின் கவிதை ஞாபகத்துக்கு வந்து தொலைக்கின்றது...)
குடும்ப நாய்கள்
அநீதிக்கு எதிராக
தினமும் இரண்டுமுறை
குரைத்து விடுகின்றன...
அரசியல்.. சமூக அநீதிக்கு எதிராக...
ஈழ வதையில்
வழிந்த ரத்தங்களை வாக்குக்காக
மணக்க மணக்க வதக்கியபடி இருக்கிறார்கள்
ஒரே சட்டியில் இரு அகப்பையோடு...
பக்.19*
எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் எதிர்க்குரல் கொடுக்கிறார் கவிஞர்.
வீட்டுச் சுவர்களில் குழந்தைகள் கிறுக்கும் மாய உலகத்தில் மனம்
நிறைந்த
குதூகலத்துடன்
பவனி வருகிறார்.
எனக்கு இத்தொகுப்பில் சிறப்பான படைப்பாக..
நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்
பக்.44
கொழுத்துக் கிடக்கும் மேய்ச்சல் நிலத்தில்
பதற பதற தின்று விட்டு...
மரத்தடியில்
அமர்ந்து நிதானமாக அசைபோடும்
மாட்டைப்போல்
மது வாகினியை
நிதானித்து உள்வாங்கினால்... ரசிக்கலாம்
சராசரி வாசக மனதுக்கு வேலை வைக்கும் வார்த்தை ப்ரயோகங்கள், மதுவாகினியின்
பலமாகவும் அதேசமயம் பலவீனமாகவும் உள்ளன.
[மதுவாகினி.....ரூ.70/- அகநாழிகை பதிப்பகம்.]
No comments:
Post a Comment