Monday, April 16, 2012

மழையின் பசியாற்றினோம்

மழையின் பசியாற்றினோம்
விழி அகன்று உடல் மலர்த்தி
ஆவல்பொங்க கூறியதை கேட்டு
அதிசயித்து சிரித்தவனை
நட்சத்திரங்களாக கூரையில் மின்னும்
துளிகளின் நினைவிலிருந்து மீண்டு
கரம்பற்றி அழைத்துச் சென்றேன்
என் துளிர்த்த காலத்திற்கு…

உத்தி பிரித்து விளையாடிய அதிகாலையில்
சிறு சிறு தூறல்களும் உடனாட
மழைக்குப் பசிக்காதா
மதுவாகினி கேட்டாள்
ஆளாளுக்கு கொட்டாங்குச்சியில்
தட்டித்தட்டி மண் இட்லி வைத்தோம்
கரைத்து விழுங்கித் தெம்பாய்
தெருவெங்கும் சுத்தம் செய்தோடிய மழையில்
அவனும் நனைந்து கொண்டிருந்தான்…


nantri: elakkiya sutram


1 comment:

சசிகலா said...

சிறு வயது நியாபகம் வந்து விட்டது மண் இட்லிக்கு புதிய கோணத்தில் வரிகள் அமைந்தது கண்டு மகிழ்ந்தேன் .

Post a Comment