Friday, January 27, 2012

வியப்பு

ஆதியில் என் பாட்டி
வர்ணங்களை குழைத்துக்கொண்டிருக்க
தவறி விழுந்த ஒரு சொட்டை
தன் வம்சத்தின் நிறமாக்கி
மூதாதைகளாக திரிகின்ற காக்கைகள்
ஒரு போதும் வந்ததில்லை
குருவி குருவி என்றோ
மைனா மைனாவென்றோ கூவிட...

2 comments:

rvelkannan said...

கவிதை சொல்லும் உண்மை புரிகிறது
அது பறவையினம்: மனித இனம் அப்படியல்ல அதே பாட்டி மூச்சு காற்று லேசாக பட்டாலே போதும்
அவரின் மூச்சே நான் தான் என்று சொல்லிக்கொண்டு வருவார்கள் நண்பா...

ந.பெரியசாமி said...

அம்மாவாசைக்குக் கூட சோறிட கூவாத சூழல் மாற்றத்தின் குற்ற உணர்வு வேல்கண்ணன். காக்கைக்காக ஒரு கவிதையாவது எழுதலாம் என்றுதான்...

Post a Comment